World

திருகுர்ஆனை தீயிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய சல்வான் மோமிகா: மர்மமான முறையில் உயிரிழப்பு!!

புனித குர்ஆனை பலமுறை எரித்த ஈராக்கிய நாத்திகரான சல்வான் மோமிகா நோர்வேயில் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே(India Today) செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் பலமுறை இஸ்லாத்துக்கு எதிராக குர்ஆனை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு சர்சையில் சிக்கிய நபர் ஆவார். இவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படும் செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இவர் பலமுறை சுவீடனில் அகதி அந்தஸ்து கோரிய போதிலும் சுவீடன் இவரது அகதித் தஞ்சக் கோரிக்கையை நிராகரித்து அவரை நாடு கடத்த தயாராக இருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

புனித குர்ஆன் எரிப்பு

2023ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28ஆம் திகதி புதன் கிழமை சுவீ­டனின் ஸ்டொக் ஹோம் நகரில், அதுவும் பள்­ளி­வா­ச­லொன்­றுக்கு முன்னால் இனம் தெரியாத ஒரு நபரால் புனித குர்ஆன் தீக்கிரையாக்கப்பட்டது.

சுவீடன் பொலி­ஸாரின் அனு­மதி பெற்று நடத்­தப்­பட்ட எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்­தின்­போது உலக முஸ்­லிம்­களை கொதித்தெழச் செய்யும் வண்ணம் அந்தக் கூட்டத்தில் இருந்த இருவர் குர்ஆன் பக்கங்களை கிழித்து, அதை கொண்டு தங்களது காலணிகளை துடைத்தனர். பின்னர் அதனை தீயிட்டு கொளுத்தினர்.

முஸ்­லிம்­களின் புனித குர்ஆன் எரிக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக பெரும்­பா­லான நாடுகள் துருக்கியை தொடர்ந்து சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகள் கண்­டனம் தெரி­வித்திருந்தன.

முஸ்லிம் நாடுகள் தங்கள் நாடு­க­ளி­லி­ருக்கும் சுவீடன் தூதுவர்களை அழைத்து சுவீடன் மீதான தங்கள் அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ள­துடன் இஸ்­லாத்­துக்கு எதி­ரான செயற்­பாட்­டினை வன்­மை­யாகக் கண்­டித்தன.

மதத்­தினை நிந்­தனை செய்யும் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளுக்கு இட­ம­ளிக்க வேண்­டா­மெ­னவும் கோரி­யிருந்தன.

குர்ஆன் பக்கங்களை கிழித்து தீயிட்ட நபர் யார்?

குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 37 வயதான வாலிபர் ஒருவரை சுவீடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். சல்வான் மோமிகா என்ற அந்த நபர், பல ஆண்டுகளுக்கு முன் ஈராக்கில் இருந்து தப்பித்து சுவீடனுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

“கருத்துச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு உணர்த்த தான் விரும்பினேன்” என்று குர்ஆனை எரித்த தன் செயலுக்கு அவர் நியாயம் கற்பித்திருந்தார்.

மேலும், “இது எங்களின் ஜனநாயக உரிமை. இவ்வாறு செய்யக்கூடாது என்று யாராவது சொன்னால், அவர்களின் கருத்து ஜனநாயகத்துக்கு ஊறுவிளைக்க கூடியது” என்று சல்வான் கூறியிருந்தார்.

குர்ஆனை எரித்து கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்திய சல்வானின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்யும் பொறுப்பு சுவீடன் போலீசாருக்கு இருந்தது.

குர்ஆனை எரிக்கும் போராட்டத்திற்கு சல்வான் போலீசாரிடம் அனுமதி கேட்டதுடன், சுவீடனில் குர்ஆனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரி இருந்தார் எனவும் சுவீடன் அரசு ஊடகமான டச்சுஸ் வெல் (Deutsche Welle) செய்தி வெளியிட்டிருந்தது.

அந்நாட்களில் அமெரிக்கா கண்டனம்

“ஒரு மதத்தின் புனித நூல் எரிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், இந்தச் சம்பவத்தை ஏற்றுக்கொள்ள இயலாது” எனவும் அமெரிக்கா தெரிவித்திருந்தது.

அந்த நாட்டின் வெளியுறவுத்துறை இணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சுவீடன் நிகழ்வுக்கு அமெரிக்காவின் கண்டனத்தையும் அந்நாட்களில் பதிவு செய்திருந்தார்.

இலங்கை அர­சு கண்­ட­னம்

‘கருத்து சுதந்­திரம் ஏனை­ய­வர்­களின் உரி­மை­களை மதிக்கும் வகையில் பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும். கருத்தச் சுதந்­திரம் ஏனைய மதங்­க­ளுக்­கி­டையில் பிள­வு­களை உரு­வாக்­குவ­தற்கும், வெறுப்­பு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் வழங்­கப்­ப­ட­வில்லை. அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

தேசிய மற்றும் சர்­வ­தேச அமைதி மற்றும் நல்­லி­ணக்­கத்தின் நலன் கருதி சமூ­கங்­க­ளுக்­கி­டையே மத சகிப்­புத்­தன்­மையை ஏற்­ப­டுத்தி வெறுப்பு செயல்­களைத் தடுப்பதற்கு அனைத்து நாடு­களும், தனி­ந­பர்­களும் கடமைப்பட்டுள்ளார்கள் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading