வாய் புற்றுநோயைக் கண்டறியும் Lollipops கண்டுபிடிப்பு

 

வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில், சுவையூட்டப்பட்ட லாலிபாப்களை பிரித்தானிய விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

இப்போது வரை, வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கான சோதனைகள் ஓரளவு வேதனையாக இருந்தன. அதற்கு நிறைய திறமை தேவைப்பட்டது.

ஆனால் இப்போது விஞ்ஞானிகள் இந்த லாலிபாப்களைக் கண்டுபிடித்துள்ளனர், இது ஒரு விரைவான நோயறிதலாக மட்டுமல்லாமல் மிகவும் உணர்திறன் கொண்டதாக இருக்கும் என கூறுகின்றனர்.

பர்மிங்காம் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்த லாலிபாப்கள் ஸ்மார்ட் ஹைட்ரோஜெலால் (smart hydrogel) ஆனது.

ஹைட்ரஜல் ஒரு வகையான மூலக்கூறு வலையாக செயல்படுகிறது. இது உமிழ்நீர் மற்றும் புரதங்களை உறிஞ்சுகிறது.

ஹைட்ரஜலுடன் இணைந்திருக்கும் புரதங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நோயறிதலைச் செய்யலாம்.

ஸ்மார்ட் ஹைட்ரஜல்கள் வாய்வழி புற்றுநோயைக் கண்டறிவதில் உண்மையிலேயே அற்புதமான ஆற்றலைக் கொண்டுள்ளன, ஏனெனில் அவை உமிழ்நீரில் உள்ள புரதத்தை எளிதில் உறிஞ்சிவிடும் என பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் ருச்சி குப்தா கூறுகிறார்.

இந்த திட்டத்தின் அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *