இலங்கை மக்களின் மனநிலை குறித்து தகவல்

உலகில் குறைவான மன உளைச்சலுக்கு உள்ளான நாடுகளில் இலங்கை தரவரிசையில் இரண்டாவது நிலையில் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபின் லைப் (Sapien Labs) இன் 2023 ஆம் ஆண்டுக்கான உலக மன நிலை அறிக்கையின்படி இலங்கையில் மன உளைச்சலுக்கு உள்ளாவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றது.

எண்பத்தொன்பது மதிப்பெண்களுடன் மனநிலை மட்டத்தில் மிக உயர்ந்த தரவரிசையில் இலங்கை இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் சனத்தொகையில் 14 சதவீதமானோர் மாத்திரமே உலகளவில் குறைவான மன உளைச்சலுக்கு ஆளாவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் டொமினிகன் குடியரசு முன்னணியில் உள்ளதுடன் தன்சானியா, பனாமா, மலேசியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன.

இதேவேளை, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் 35 சதவீதம் வரை மனநல சவால்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *