Sports

தென்னாப்பிரிக்காவில் கடத்தப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்!

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில், வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த, 28 வயது பாபியன் ஆலன் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஜோகனஸ்பர்க்கில் உள்ள தங்கும் விடுதிக்கு அவர் சென்றபோது, விடுதிக்கு வெளியே சிலர் அவரை துப்பாக்கி முனையில் சிறைபிடித்து, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்றதும், பாபியன் ஆலனிடம் இருந்த செல்போன், பணம், அவரது தனிப்பட்ட டைரி, பேக் போன்ற பொருட்களை வழிப்பறி செய்துவிட்டு, தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும், அந்த இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையிலும், அவர்களுக்கு தெரியாமல் இருந்த சம்பவம் நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்த உடனே, இதுகுறித்து ட்விட்டரில் பலரும் விவாதிக்க ஆரம்பித்தனர். இருப்பினும், தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் நிர்வாகமும், பார்ல் ராயல்ஸ் நிர்வாகமும் எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தன. இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து தீவிர விசாரணையை நடத்தி, சம்பவம் நடைபெற்றது உண்மைதான் என அறிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேட்டிகொடுத்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர், ”எங்களது அணி தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரே கோலே, உடனே பாபியன் ஆலனை தொடர்பு கொண்டார்.

அப்போது, சக வீரர் ஒபிட் மிக்கே ஆலனுடன் இருந்தார். பாபியன் ஆலனுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. பொருட்களை மட்டுமே வழிப்பறி செய்து இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் நிர்வாகமும், பார்ல் ராயல்ஸும் ஆலனுக்கு துணையாக இருக்கிறார்கள்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading