சார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரியை உருவாக்கிய நிறுவனம்!

 

சார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய பேட்டரியை சீன நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது.

சீன Startup நிறுவனம் ஒன்று புதிய வகை பேட்டரியை தயாரிப்பதாக கூறியுள்ளது.

தங்கள் பேட்டரி 50 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், சாதாரண பேட்டரிகளைப் போல நிலையான சார்ஜிங் அல்லது பராமரிப்பு தேவைப்படாது என்றும் நிறுவனம் கூறுகிறது.

63 அணுசக்தி ஐசோடோப்புகளை (nuclear isotopes) ஒரு நாணயத்தை விட சிறிய தொகுதியாக வைத்து, அணுசக்தியை miniaturisation செய்வதை உலகிலேயே முதன்முதலில் இந்த பேட்டரி தான் என்று சீனாவின் Betavolt நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அடுத்த தலைமுறை பேட்டரி ஏற்கனவே சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இறுதியில் அவை தொலைபேசிகள் மற்றும் ட்ரோன்கள் போன்றவற்றில் வணிக பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படும் என்று கூறியுள்ளது.

விண்வெளி, AI உபகரணங்கள், மருத்துவ சாதனங்கள், நுண்செயலிகள், மேம்பட்ட சென்சார்கள், சிறிய ட்ரோன்கள் மற்றும் மைக்ரோ ரோபோக்கள் போன்ற பல விஷயங்களில் இந்த அணுசக்தி பேட்டரிகள் நீண்ட கால மின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், AI தொழில்நுட்ப புரட்சியில் சீனா முன்னிலை வகிக்க இது உதவும் என்று நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த செயல்முறை முதன்முதலில் 20-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் இந்த தொழில்நுட்பத்தை விண்கலம், underwater systems மற்றும் தொலைதூர அறிவியல் நிலையங்களுக்கு பயன்படுத்தினர். இருப்பினும் இந்த thermonuclear batteryகள் விலை உயர்ந்தவை மற்றும் கனமானவை.

சீனா 2021 மற்றும் 2025-க்கு இடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்த 14வது ஐந்தாண்டு திட்டத்தை செயல்படுத்தியது. இதன் கீழ், அணு மின்கலங்களை மினியேட்டரைசேஷன் மற்றும் வணிகமயமாக்கலுக்கான தேடல் தொடங்கியது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இது பற்றிய ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த பேட்டரியின் சிறப்பு என்ன?

Betavolt தனது முதல் அணுக்கரு பேட்டரி 15x15x5 கன மில்லிமீட்டர் அளவு கொண்டது என்று கூறியுள்ளது. இது 100 microwatt power மற்றும் 3V voltage வழங்க முடியும்.

இருப்பினும், 2025க்குள் 1 வாட் ஆற்றலை வழங்கும் பேட்டரியை தயாரிப்பதே நிறுவனத்தின் இலக்கு. அவற்றின் சிறிய அளவு காரணமாக, அதிக சக்தியை உருவாக்க அவற்றை ஒன்றாக இணைக்க முடியும்.

இதனிடையே Betavolt நிறுவனம் ஒரு மொபைல் ஃபோனை கற்பனை செய்து கொண்டிருக்கிறது. அந்த போனை ஒருபோதும் சார்ஜ் செய்யப்பட வேண்டியதில்லை.

அதேபோல், எப்போதும் பறக்கக்கூடிய ஆளில்லா விமானத்தை (Drones) உருவாக்க திட்டமிட்டு வருகிறது.

நிறுவனத்தின் கூற்றுப்படி, அவற்றின் பேட்டரிகள் தீப்பிடிக்காது, அல்லது திடீர் சக்தியால் வெடிக்காது. இது 60C முதல் 120C வரையிலான வெப்பநிலையிலும் வேலை செய்யக்கூடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *