Technology

மரணத்தையும் துல்லியமாக கணிக்கும் Al தொழில்நுட்பம்!

AI தொழில்நுட்பம் மனிதனின் மரணத்தைக் கூட கண்டுபிடிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

AI தொழில்நுட்பம் அதன் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகிறது. இன்று, AI தொழில்நுட்பம் ஏற்கனவே பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு உதவியாக உள்ளது. மருத்துவம், கல்வி, போக்குவரத்து, தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் AI இன் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், AI இனி மரணத்தைக் கூட கணிக்க முடியும் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க்கை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு AI அடிப்படையிலான கால்குலேட்டரை உருவாக்கியுள்ளனர். இது ஒரு தனிநபரின் ஆயுட்காலத்தை முன்கூட்டியே துல்லியமாக கணிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

“Life2vec” என பெயரிடப்பட்டுள்ள இந்த இறப்பு கால்குலேட்டர், மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை வரிசைப்படுத்தி அவர்களின் இறப்பை கணிக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் மற்ற AI சாதனங்களைப் போலல்லாமல், ஒருவரின் இறப்பை 78 வீதம் துல்லியமாகக் கணிக்கிறது.

இந்த ஆய்வை உறுதிப்படுத்த கடந்த 2008 முதல் 2020க்குள் ஆறு மில்லியன் டேனிஷ் மக்களின் மக்கள் தொகையை துல்லியமாக கணிக்க “Life2vec“ சோதிக்கப்பட்டுள்ளது.

Oruvan

ஒருவரின் வயது, பாலினம் அடிப்படையில் யாரெல்லாம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே உயிர் வாழ்வார்கள் என்பதை இந்த தொழில்நுட்பம் துல்லியமாக கணித்துள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

“Life2vec” என்பது ஒரு பெரிய மொழி மாதிரி (LLM) ஆகும். இது டேனிஷ் மொழியில் உள்ள டேட்டாவைப் பயிற்சி பெற்றது. இந்த டேட்டாவின் அடிப்படையில், ஒரு நபரின் வாழ்க்கை நிகழ்வுகள், உடல்நல நிலை, தொழில், இருப்பிடம் போன்றவற்றை ஆராய்ந்து அவர்களின் இறப்பை கணிக்கும்.

இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆரம்ப கட்டத்திலேயே நோய்களைக் கண்டறிய முடியும். இதனால், நோய்களைக் குணப்படுத்தும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading