Entertainment

குறட்டைவிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ள பூனை

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷையரில் உள்ள ஹண்டிங்டனை சேர்ந்த 14 வயதான பெல்லா என்ற மோக்கி பூனை சத்தமாக குறட்டை விட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

அவரது உரிமையாளரான நிக்கோல் ஸ்பிங்கின் குறித்த பூனை தொடர்பில் கூறுகையில்,

பெல்லாவின் தனித்துவமான திறமை இயற்கையாகவே உருவானது. அவள் நாள் முழுவதும் துடிப்பாக இருக்கிறாள். சுற்றி உணவு இருந்தால் தை சாப்பிடும் போதும் விளையாடும் போதும் அவள் சுறுசுறுப்பாகவே இருக்கின்றாள்.

அவள் சத்தமாக தொலைக்காட்சி பார்க்க விரும்புகிறாள். எனது மறைந்த கணவர் எப்போதும் பெல்லாவின் சத்தத்தை கேட்டு புலம்புவார்.

video

பெல்லாவை கின்னஸ் சாதனைக்கு பதிவு செய்த போது, ஒளியை அளவிடும் கருவியின் மதிப்பு படி 54.59 வீதமான சத்தத்தை எழுப்பிதாக கின்னஸ் சாதனை பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.

பெல்லா மிகவும் கூச்ச சுபாவம் உடையது. வீட்டிற்கு புதிதாக வருபவர்கள் முன்னிலையில் வரத்தயங்கும் ஒரு பூனை எனவும் அதன் உரிமையாளர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading