Local

இலங்கையின் நகர்ப்புற மக்கள் தொகை சடுதியாக அதிகரிப்பு

இலங்கையின் நகர்ப்புற மக்கள் தொகை 44.57 வீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையை தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி ஹேவகே, அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் பாராளுமன்ற வளாகத்தில் வைத்து கையளித்துள்ளார்.

நகர் மற்றும் கிராம திட்டமிடல் சட்டத்தின்படி தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் நகரமயமாக்கல் தொடர்பான கடைசி கணக்கெடுப்பு 2012 இல் நடத்தப்பட்டது. மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பின்படி, இலங்கையின் நகரமயமாக்கல் 18.2 வீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading