Local

தெற்கில் நடந்த வன்முறைகளின் பின்னணியில் கோட்டாபய வழிநடத்திய குழுக்கள்

இலங்கையின் தென் பகுதிகளில் நடந்த வன்முறை சம்பவங்களின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் வழிநடத்தப்பட்ட குழுக்கள் இருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த வன்முறைகள் தொடர்பாக பொதுவாக இராணுவ புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தக்கூடாது.

நான் இராணுவ தளபதியாக பணியாற்றிய காலத்தில் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளுக்கு நான் நேரடியாக உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை.

Field marshal Sarath Fonseka MP
அன்று பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச உத்தரவுகளை பிறப்பித்தார். கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளுக்கு கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவருடன் இருந்தவர்களே பொறுப்பாக இருந்தனர்.

இதன் காரணமாகவே அப்போது கொழும்பில் நடந்த சில குற்றச் செயல்கள் தொடர்பில் நான் கோட்டாபய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தினேன்.

கோட்டாபய ராஜபக்ச, ஹெந்தா வித்தாரண போன்றோர் வழிநடத்திய குழுவில் தற்போதைய அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவும் உள்ளடங்கியிருந்தார் எனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading