LocalSports

இலங்கையின் 17 வருட பதக்க கனவு பறிபோனது!

17 வருடங்களின் பின்னர் இன்று ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.

400×4 மீற்றர்  கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இணைந்துகொண்ட இலங்கை அணி இரண்டாவது இடத்தைப் பெற்ற போதிலும், அது சட்டவிரோத வெற்றி என போட்டி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

போட்டியில் இணைந்த இலங்கை அணி வீரர் ஒருவர் மற்றொருவரின் பாதையைத் தொட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த தீர்மானம் தொடர்பாக இலங்கை மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

17 வருடங்களின் பின்னர் வௌ்ளிப்பதக்கம் வென்ற இலங்கை!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றுள்ளது.

400×4 மீற்றர் கலப்புத் தொடர் ஓட்டப் போட்டியில் இந்த பதக்கம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

இதில் இந்தியா வெண்கலப் பதக்கத்தையும், பஹ்ரைன் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் போட்டியில் இலங்கை வென்ற முதல் பதக்கம் இதுவென்பது விசேடம்சமாகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading