Features

சாப்பிட்ட உடனே உறங்குபவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு!

பலருக்கும் சாப்பிட்ட உடனே தூக்கம் வருவது வழக்கம். அப்படி தூக்கம் வரும்போது தூங்கச் செல்வது உடலில் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

இரவு தாமதமாக சாப்பிடுவது மற்றும் சாப்பிட்ட உடன் தூங்க செல்வது போன்ற பழக்கங்கள் நமக்கு புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் சாப்பிட உடன் உறங்கச் செல்வது உடல் எடையை அதிகரிக்கக்கூடும் என்பது பலருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான்.

இருப்பினும் பார்ஸிலோனா குளோபல் ஹெல்த் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் அன்றாடம் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிடாமல் சாப்பிட்டுவிட்டு இரண்டு மணி நேரத்திற்குள் தூங்கச் செல்பவர்களுக்கு அதிகப்படியாக புற்று நோய் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.

எனவே சாப்பிட்டவுடன் தூங்குவதை தவிர்ப்பது நல்லது. சாப்பிட்டவுடன் தூங்குவதால் புற்றுநோய் மட்டும் என்றில்லாமல் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தி நம் உடலில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதன் மூலம் உயிருக்கே உலை வைக்க கூடும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading