Business

DFCC Agile Design Thinking Awards 2023 நிகழ்வு!


இலங்கையின் மிகவும் பிரதிபலிப்பு மிக்க மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வங்கிகளில் ஒன்றான DFCC வங்கி, தனது பணியாளர்கள் மத்தியில் புத்தாக்கம் மற்றும் விரைவியக்கம் ஆகியவற்றிற்கான மேம்பாட்டில் அதிகளவில் முதலீடு செய்துள்ளது. DFCC வங்கியில் உள்ள புத்தாக்கம் மற்றும் விரைவியக்கம் சார்ந்த மாற்றம் ஆனது DFCC விரைவியக்க புத்தாக்க மையம் (Agile Innovation Centre) மற்றும் மனிதவள துறைகளால் ஒருங்கிணைக்கப்பட்டு வழிநடத்தப்படுவதுடன், இவை இரண்டும் வங்கியின் பணியாளர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன. இந்த முயற்சியானது, சவாலான நவீன வணிக சூழலை திறமையாக கையாளும் திறனை வங்கிக்கு அளிக்கின்ற அதே சமயம், பணியாளர்கள் தலைமையிலான மாற்றத்தை ஊக்குவிக்கிறது.

DFCC வங்கியின் பணியாளர்களில் சிறந்த மற்றும் மிகவும் புத்தாக்க சிந்தனையாளர்கள் மற்றும் பிரச்சனைகளை தீர்ப்பவர்கள், சமீபத்தில் DFCC Agile design thinking Capacity Training certificate Awards 2023 என்ற நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்டனர். இது DFCC Agile Innovation Centre ஆல் வடிவமைக்கப்பட்ட ஒரு விசேட விருது வழங்கல் திட்டமாகக் காணப்படுவதுடன், சிந்தனை வடிவமைப்பில் மேன்மையாக செயற்படுகின்றவர்களை அங்கீகரிப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்றது.

வங்கியின் இடை நிலை மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ நிர்வாகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 45 பணியாளர்களுக்கு 2022 இல் இது தொடர்பான பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது. வங்கியின் ஒத்துழைப்புடன், Innovation Quotient (IQ)  அணியின் நிபுணர்களால் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது. தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல அங்கீகார பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு, பயிற்சியாளர்கள் மற்றும் சக ஊழியர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் 34 பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading