World

இரண்டாம் உலகப் போரின் போது 1000 பேருடன் கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு!

ஜப்பான் நாட்டை சேர்ந்த மான்டிவீடியோ மாரு என்ற பெயரிலான கப்பலானது ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சுமந்து கொண்டு கடலில் பயணம் செய்து கொண்டிருந்தது. 1942-ம் ஆண்டு 2-ம் உலக போர் நடந்த சமயம் அது.

பப்புவா நியூ கினியாவில் வைத்து 850 போர் கைதிகள் மற்றும் பொதுமக்களில் 200 பேரை சிறை பிடித்த ஜப்பானியர்கள் அந்த கப்பலில் பயணித்து உள்ளனர். அந்த வழியே அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பலான யூ.எஸ்.எஸ். ஸ்டர்ஜன் வந்து உள்ளது.

மக்கள் பீதி இந்த நிலையில், கப்பலில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாத சூழலில், அதனை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் குண்டு வீசி தாக்கி, அழித்தது. பின்னர் அதனை வெற்றியாகவும் கொண்டாடியுள்ளனர்.

இந்த பேரிடரில் 12-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டன. டென்மார்க், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா உள்பட ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்களும் அதில் இருந்து உள்ளனர். இந்த சூழலில், ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறை, கடல்பகுதி தொல்லியலாளர்கள் மற்றும் பூக்ரோ என்ற டச்சு நாட்டு ஆழ்கடல் ஆய்வு நிறுவனம் இணைந்து கப்பலை தேடும் பணியில் இந்த வார தொடக்கத்தில் ஈடுபட்டது. பிலிப்பைன்சை ஒட்டிய தென்சீன கடல் பகுதியில் அந்த கப்பல் தற்போது கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லெஸ் கூறும்போது, இந்த கப்பலை பற்றிய செய்தியை அறிவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய குடும்பத்தினர் காத்திருந்தனர். 80 ஆண்டுகளுக்கு பின்பு, தேடுதல் பணியின் முயற்சியால், இறுதியாக கப்பலின் இருப்பிடம் கண்டறியப்பட்டு உள்ளதற்கு நன்றிகள் என தெரிவித்து உள்ளார். கப்பலில் பயணித்த ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் உயிரிழந்து விட்டனர் என வாய்ஸ் ஆப் அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading