Features

உறங்குவதில் ஏற்படும் சிக்கல் பக்கவாதம் ஏற்படும் அபாயம்!

உறங்குவதில் பிரச்சினை இருப்பவர்களுக்குப் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம் என்று ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 

அதற்கமைய, தூக்கத்தின் தரம் குறைந்திருப்பதற்கான அறிகுறிகளில் ஒருசில…

Sleep
  • குறட்டை
  • மூக்கின் மூலம் சரியாக மூச்சு விடமுடியாதது
  • மெத்தையில் திரும்பிக்கொண்டே இருப்பது
  • இரவெல்லாம் கண்விழித்துப் பகலில் நீண்டநேரம் தூங்குவது
  • மிகக் குறைவாகத் தூங்குவது
  • அளவுக்கு மீறித் தூங்குவது

அதுபோன்ற ஐந்துக்கு மேற்பட்ட அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு, தூக்கப் பிரச்சினை இல்லாதவர்களைக் காட்டிலும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து 5 மடங்கு அதிகம் என்கிறார் அயர்லந்தின் கால்வே பல்கலைக்கழகத்தின் (University of Galway) ஆய்வாளர் கிறிஸ்டீன் மெக்கார்த்தி (Christine McCarthy). 

அவர் நடத்திய INTERSTROKE எனும் அனைத்துலக ஆய்வில் 4,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். 

Sleep

அவர்களில் 2,200க்கும் மேற்பட்டவர்களுக்குப் பக்கவாதம், ரத்தங்கட்டுதல் போன்ற உடல்நலக் கோளாறுகள் இருந்தன. 

அத்தகையோரின் தூக்கத்தின் தரம் குறைவாகக் காணப்பட்டது. 

ஆய்வில் தெரியவந்தது..

  • நாள்தோறும் சராசரியாக 5 மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்குவோருக்குப் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்து மும்மடங்கு அதிகம்
  • நாள்தோறும் சராசரியாக 9 மணி நேரத்துக்கும் அதிகமாகத் தூங்குபவர்களுக்குப் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்து இரு மடங்கு அதிகம் 
  • பெரியவர்கள் நாளுக்கு 7 மணிநேரம் தூங்குவது ஆரோக்கியமானது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading