Uncategorized

நகம் கடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு!

நம்மில் பெரும்பாலானோருக்கு பயம் பதற்றம் உள்ளிட்டவை வரும் போது நகம் கடிக்கும் பழக்கத்தை வைத்திருப்போம். பொதுவாக நகம் கடிக்கும் பழக்கம் என்பது மனதளவில் நம்மை சிறுமைபடுத்தும் விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் இது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாகும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நகம் கடிக்கும் பழக்கம் உருவாவது எப்படி?

யாருக்கேனும் தேவைய்ற்ற எண்ணங்கள் அல்லது யோசனைகள் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு திரும்பத் திரும்ப ஏதாவது ஒன்றை செய்துகொண்டிருக்கக் கூடிய எண்ணம் உருவாகும் எனவும், இது தான் நகம் கடிக்கும் பழக்கத்தின் ஆரம்ப நிலை எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அடிக்கடி நகம் கடிப்பது பயத்துடன் தொடர்புடையது என்றும், பயம், பதற்றம் உள்ளிட்டவற்றை போக்குகிறது. தனிமையில் தேவையற்ற சிந்தனைகள் உதிக்கும் பொழுதும், பதட்டமடைபவர்களும் அடிக்கடி நகம் கடிக்கும் பழக்கத்திற்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

என்னென்ன பாதிப்புகள்?

சிறு வயதில் ஏற்படும் இந்த பழக்கம் சிலருக்கு பெரியவர்களாக ஆனாலும் அவர்களை விட்டு நீங்குவதில்லை. நகம் கடிப்பதால் பாக்டீரீயா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகளால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் வயிற்றினுள் நோய்த் தொற்றுகள் ஏற்படுவதுடன் நகங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள சதைகளும் பாதிக்கப்பட்டு நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன.

இவற்றிற்கு முறையான சிகிச்சை எடுக்க வேண்டும். இல்லை எனில் செப்டிக் ஷாக் மற்றும் செப்சிஸ் தொற்று உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு அதிக பாதிப்பை உண்டாக்கும் என்றும் சில நேரங்களில் அது உயிருக்கே கேடு விளைவிக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பற்களின் ஈறுகளில் உள்ள திசுக்களை சேதப்படுத்தி வலியை உண்டாக்குவது மட்டுமல்லாமல் ஈறுகளில் நோய்த்தொற்று அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.

நகத்தில் உள்ள அழுக்குகள் நம் வயிற்றுக்குள் செல்வதால் அது பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

தடுக்கும் வழிமுறைகள்:

நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிக அளவில் தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

தேவைய்ற்ற சிந்தனைகள் மூலம் பயம் கொள்ளுதல் அல்லது பதற்றமடைதல் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும்.

நகத்தை அடிக்கடி சுத்தமாக வெட்டிவிடுவதன் மூலம் நகம் கடிக்கும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொள்ள முடியும். அதுவே பின்னாளில் அறவே அப்பழக்கத்தில் இருந்து விடுபடவும் வழிவகுக்கும்.

கசப்பான எண்ணெய்யை கைகளில் தடவி விடலாம். கைகளில் கையுறை அணிந்து கொள்வது, நெயில் பாலிஷ் உள்ளிட்டவற்றின் மூலம் நகங்களை அழகுபடுத்துவது ஆகியவையும் நகம் கடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading