World

சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்காவின் முடிவால் பதற்றம்!

சந்தேகத்திற்குரிய சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்கா தயாராகி வருவதால், அமெரிக்காவின் பல விமான நிலையங்களில் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு முயற்சி காரணமாக தென் கரோலினாவில் உள்ள மர்டில் பீச் சர்வதேச விமான நிலையம் உட்பட மூன்று விமான நிலையங்களில் விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) தெரிவித்துள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் தென் கரோலினா கடற்கரையை சுற்றி 100 சதுர மைல்களுக்குள் பொதுமக்கள் விமானங்களை அமெரிக்கா தற்காலிகமாக தடை செய்துள்ளது.

அதன் வான்வெளியில் பறக்கும் சந்தேகத்திற்குரிய சீன உளவு பலூனை அமெரிக்கா அவதானிக்கப் போகிறது என்று ஜனாதிபதி ஜோ 

AP செய்தி நிறுவனத்தின் ஆதாரங்களின்படி, அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே பலூனை சுட்டு வீழ்த்தும் திட்டத்தை ஜனாதிபதி பரிசீலித்து வருகிறார் எனவும் அங்கு எச்சங்கள் மீட்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவு பலூனின் கண்டுபிடிப்பு சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதட்டத்தையும் ராஜதந்திர ரீதியிலான சண்டையையும் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading