Local

இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட மின்சார கார் அறிமுகம்!

இலங்கையில் முதன் முதலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முழு மின்சார கார் ‘மோக்ஷா’ இன்று அறிமுகப்படுத்தப்பட்டது

உலகம் முழுவதிலும் அதிக பிரபல்யம் பெற்ற ஒஸ்டின் மினி மோக்கினால் ஈர்க்கப்பட்ட ஐடியல் மோக்ஷா, இலங்கை கார் சந்தையில் புரட்சியை உருவாக்கும் திறன் கொண்ட கார் நிறுவனமாகும்.

சாரதி மற்றும் 3 பயணிகள் வசதியாக பயணிக்க முடியும் வகையில் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த காரை வீட்டில் பயன்படுத்தும் மின்சாரத்தை பயன்படுத்தி சில நிமிடங்களில் சார்ஜ் செய்துக் கொள்ள முடியம்.

இதன் எடை 870 கிலோ மற்றும் 1080 ஆர்பிஎம் வேகம் கொண்டதாகும்.

3 பயணிகள் வசதியாக பயணிக்க முடியும். வெளிப்புற தோற்றம் இரண்டு-தொனி கலவையாகும்.

மேலும், ஐடியல் மோக்ஷா மின்சார மோட்டாருக்கு 2 வருட முழு உத்திரவாதம் மற்றும் வாங்கிய நாளிலிருந்து பேட்டரிக்கு 5 வருட உத்திரவாதம் வழங்கப்படுகின்றது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் மலிவு விலையில் கிடைக்கும் மின்சார காரான Ideal Moksha, இலங்கையில் உள்நாட்டு பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானதாகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading