World

முன்னாள் இந்திய நடிகை சனா கான் மற்றும் அவரது கணவர் ஹஜ் செய்வதற்கு பயணம்!

தன்னுடைய சினிமா தொழிலை கைவிட்ட முன்னாள் பாலிவுட் நடிகை சனா கான் தன் முதல் ஹஜ் யாத்திரையை பற்றி கூறும் பொழுது, உணர்வுகளை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்றும் தன் ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.

கணவன் அனஸ் செய்யது அவர்களுடன் சனாகான் ஹஜ் யாத்திரைக்கு சென்று இருக்கிறார். தன்னுடைய ஹஜ்ஜின் அனுபவத்தை அநேக போட்டோக்களும் வீடியோக்களும் சனாக்கான் பகிர்ந்து கொண்டார்,

அல்லாஹ்வின் வீட்டிற்கு வருவது என்பது கனவு போல் உள்ளது, ஒவ்வொருவருடைய ஹஜ்ஜும் உம்ராவும் லேசாகட்டும் அல்லாஹ்விடத்தில் நான் பூவை தான் கேட்டேன் அல்லாஹ் ஒரு பூந்தோட்டத்தையே தந்தான், பொறுமையும் அல்லாஹ்விடத்தில் அர்ப்பணிக்கும் பண்பும் தான் அதிகமாக தேவைப்படுகிறது, அல்லாஹுவுக்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading