World

மனைவிக்கு முதுகுவலி இழப்பீடு பெற்ற கணவன்!

மனைவிக்கு ஏற்பட்ட முதுகுவலியால், கணவனுக்க 20 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ள சம்பவ​மொன்று பெங்களூரில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “பெங்களூரு பலகெரேயை சேர்ந்த ஒருவர், ஒயிட்பீல்டு பகுதியிலுள்ள எலெக்ட்ரானிக் கடையில்,2011-ம் ஆண்டு ஒரு சலவை இயந்திரத்தை (வொஷிங் மெஷின்) கொள்வனவு செய்திருந்தார்.

சலவை இயந்திரத்தை கொள்வனவு செய்துபோதே, அதன் விலையிலிருந்து அதிகப்படியாக ரூ.5 ஆயிரம் செலுத்தி, மேலதிகமாக 2 ஆண்டுக்கு உத்தரவாதத்தை (வொரண்டி) கூடுதலாக பெற்றிருந்தார்.

இந்நிலையில், உத்தரவாத காலம் இருக்கும் போதே, சலவை இயந்திரம்   பழுதானது. இதையடுத்து, அதனை பழுது பார்த்து கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட எலெக்ட்ரானிக் நிறுவனத்திடம் கோரியிருந்தார்.

சலவை இயந்திரத்தை பழுதுப் பார்ப்பதற்காக நபர் வந்து, அதனை புகைப்படம் மட்டுமே எடுத்து சென்றதாக தெரிகிறது. உத்தரவாத காலம் இருந்தும், சலவை இயந்திரத்தை திருத்துவதற்கு, எலெக்ட்ரானிக் நிறுவனத்திடம் இருந்து யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, பெங்களூருவில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் அந்த நபர் எலக்ட்ரானிக் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். அதில், ” சலவை இயந்திரம் (வொஷிங் மெஷின்) பழுதானதால் எனது மனைவி துணிகளை தொடர்ந்து தனது கையால் துவைத்ததால் முதுகுவலி உண்டானது. இதற்கு சிகிச்சை பெற்றதற்காக ரூ.2 இலட்சம் உட்பட ரூ.3 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று அந்த நபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கில், உத்தரவாதம் இருந்தும் சலவை இயந்திரத்தில் (வொஷின் மெஷின்) நீக்காததால், அந்த நபருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கும்படி எலெக்ட்ரானிக் நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்” 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading