World

ஜெர்மனியில் 558,000 பணி வெற்றிடங்கள் ஊழியர்களின்றி கடும் நெருக்கடி!

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு ஜெர்மனியின் திறமையான தொழிலாளர் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது.

இதனால் ஜெர்மனியின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

தங்களின் ஊதியத்திற்கு ஏற்பட்ட திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறை ஒரு வருட இடைவெளியில் இரு மடங்காக அதிகரித்துள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

44 சதவீத வணிகங்கள் இப்போது தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பின்வாங்கப்படுவதாகக் கூறுகின்றன.

இந்த எண்ணிக்கை 2021ஆம் ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும் மற்றும் 2011 இல் கணக்கெடுப்பு தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டின் மிகப்பெரிய விகிதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திறமையான தொழிலாளர்களுக்காக 558.000 பணி வெற்றிடங்கள் இருப்பதாக கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜெர்மனியில் தகுதியான ஊழியர்கள் இந்த வெற்றிடங்களை நிறப்புவதற்கு இல்லை என கூறப்படுகின்றது.

இது ஒரு புதிய சாதனையாகும். பற்றாக்குறை இப்போது குறிப்பிட்ட துறைகளை விட, முழு தொழிலாளர் சந்தையையும் பாதித்துள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading