Local

பேஸ்புக் பெயரில் மாற்றம் விரைவில் புதிய பெயர் அறிமுகம்!

பேஸ்புக் நிறுவனம் அதன் பெயரை மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி ,புத்தகத்தை படிக்காதவர்கள் கூட பேஸ்புக் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் ஊடகவியலாளராக மாற்றிய பெருமையும், மாற்றி வரும் பெருமையும் பேஸ்புக் செயலிக்கு மட்டுமே உண்டு.

உலகில் எந்த செயலி முடங்கினாலும் அதன் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்று தெரியாது. அதே நேரத்தில் ஒரு நொடி முடங்கினால் கூட பேஸ்புக் பயனர்கள் இந்த உலகையே ஸ்தம்பிக்க வைத்துவிடுவார்கள். அந்த அளவிற்கு உடலோடு உடையாக இணைந்து விட்டது பேஸ்புக்.

அந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் தற்போது மெட்டாவர்ஸை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

இதை பிரதிபலிக்கும் வகையில், ஒக்டோபர் 28ஆம் திகதி வருடாந்த இணைப்பு மாநாட்டை நடத்த உள்ளது.

இந்த மாநாட்டில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் பங்கேற்று, அது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ,இது ஒருபுறமிருக்க பேஸ்புக் பெயர் மாறுகிறதா… அல்லது நிறுவனத்தின் பெயர் மாறுகிறதா என்கிற பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில், அதற்கான விடை அக்டோபர் 28இல் தெரியவரலாம். இந்த பெயர் மாற்றம் பேஸ்புக் நிறுவனத்தின் Instagram, Whatsapp, Oculus ஆகியவற்றையும் சார்ந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading