Local

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 20வது திருத்தத்தை நிறைவேற்ற இடம் பெற்ற அரசியல் டீல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நல்லாட்சி மற்றும் சுபீட்சமான எதிர்காலம் ஆகிய சொற்பதங்களினால் ஏமாற்றமடைந்தது மாத்திரமே மிகுதியாகியுள்ளது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு கத்தோலிக்க பேராயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அரசியல் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சூழ்ச்சியென முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா குறிப்பிட்டதன் உண்மை தன்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்துவமாறு அரசாங்கத்துக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்த தாக்குதல் சம்வபத்துடன், தொடர்புடையவர்களை மூன்று மாத காலத்திற்குள் சட்டத்தின் முன்னிலைப்படுத்துவதாக குறிப்பிட்ட அரசாங்கம் இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இதுவரையில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டதையும், அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை நிறைவேற்றிக்​கொள்வறத்காக, இடம் பெற்ற அரசியல் டீல் ஊடாக அறிந்துக் கொண்டோம்.

எவ்வாறாயினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து உண்மை தன்மையுடன் அரசாங்கம் செயற்பட வேண்டும்.

அவ்வாறு இல்லாவிடின் முன்னர் குறிப்பிட்டதை போன்று சர்வதேச அமைப்புக்களை நாட நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading