World

நைஜீரியாவில் புதிய கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது!

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் புதிய வடிவிலான கொரோனா வைரஸ் தென்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக உலகளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு, பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து இப்போதுதான் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இந்நிலையில், இந்த தடுப்பூசிகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்தில் ஏற்கனவே உள்ள கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது. மிகவும் அதிவேகமாக பரவக்கூடிய இதற்கு ‘VUI-202012/0’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பிரிட்டனில் அச்சுறுத்தும் புதிய வகை வைரஸை காட்டிலும் வீரியம் மிக்க மேலும் ஒரு கொரோனா வைரஸ் வகை தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து பிரிட்டன் சென்ற 2 பேருக்கு நடத்திய பரிசோதனையில், கொரோனா வைரஸின் மாறுபட்ட புதிய வடிவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது 70%-த்திற்கும் அதிகமான வேகத்தில் பரவக்கூடியது என்பதால் மிகுந்த கவலை அளிப்பதாக பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேத் ஹன்காக்  கூறியுள்ளார்.

இந்த நிலையில், நைஜீரியாவில் இவற்றில் இருந்து வேறுபட்ட புதிய வடிவிலான கொரோனா வைரஸ் தென்பட்டுள்ளதாக அந்த நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்து உள்ளது. இந்த புது வகை வைரஸ் குறித்து ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் ஜான் கெங்கசாங் கூறியதாவது, ‘இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் பரவும் கொரோனாவை போல இல்லாமல் இது தனி வைரஸாக உருவாகியுள்ளது..ஆனால், இது என்ன வைரஸ் என்று உறுதியாக தெரியவில்லை..இந்த புதிய வைரஸ் குறித்து ஆய்வுகளை நடத்தி வருகிறோம்.’ என்றார். இப்படி ஒவ்வொரு நாட்டிலும் புது புது வைரஸ் பரவி வருவதால் மக்கள் கலக்கம் அடைந்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading