Local

கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்வு!

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்ந்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.78 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.43 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 12.27 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா       –  பாதிப்பு – 96,90,034, உயிரிழப்பு – 2,38,628, குணமடைந்தோர் – 62,32,717
இந்தியா       –    பாதிப்பு – 83,12,947, உயிரிழப்பு –  1,23,650, குணமடைந்தோர் – 76,54,757
பிரேசில்       –    பாதிப்பு – 55,67,126, உயிரிழப்பு –  1,60,548, குணமடைந்தோர் – 50,28,216
ரஷியா        –    பாதிப்பு – 16,73,686, உயிரிழப்பு –   28,828, குணமடைந்தோர்  – 12,51,364
பிரான்ஸ்     –     பாதிப்பு – 15,02,763, உயிரிழப்பு –   38,289, குணமடைந்தோர்  –  1,20,714

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -13,31,756
அர்ஜென்டினா – 11,95,276
கொலம்பியா – 10,99,392
இங்கிலாந்து – 10,73,882
மெக்சிகோ – 9,33,155
பெரு – 9,08,902
இத்தாலி – 7,59,829
தென்னாப்பிரிக்கா – 7,28,836
ஈரான்- 6,37,712
ஜெர்மனி – 5,77,131…

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading