East

அர்பணிப்பு மிக்க சமூதாய உருவாக்கத்திற்கு இளைஞசர்களின் பங்களிப்பு அவசியம்

அர்பணிப்பு மிக்க சமூதாய உருவாக்கத்திற்கு
இளைஞசர்களின் பங்களிப்பு அவசியம்

-பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்


கல்முனை பால்கன் விளையாட்டுக்கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வு நேற்று (26) கல்முனை இக்பால் சன சமூக நிலையத்தின் கேட்போர் கூடத்தில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.

பால்கன் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் யு. கே. லாபிர் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிய மேற்படி நிகழ்விற்கு பிரதம அதிதியாக அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் உரையாற்றும் இவ்வாறு தெரிவித்தார் மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்

விளையாட்டின் மூலம் எமது சமூகமும் பிராந்தியமும் அடையவேண்டிய அபிவிருத்தி, எமது தேசத்தையும் சமூகத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய அர்பணிப்பு மிக்க சமூதாய உருவாக்கத்திற்கு இளைஞ்சர்களின் பங்களிப்பு, பிரிவினை வாதம் கடந்த சமூக ஒற்றுமை போன்றவிடயங்கள் எம்மிடையே உருவாக வேண்டும் என்றும் இனங்களுக்கு இடையே விளையாட்டின் மூலம் பரஸ்பரம் புரிந்துணர்வு ஏற்படுவதன் அவசியம் மற்றும் எதிர்கால சந்ததியினர் எதிர்நோக்க இருக்கும் பாரிய சவால்களை எமது சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளக் காத்திருக்கின்றது என்றும் விரிவாக உரையாற்றினார். மேலும் கூறுகையில் மிகவிரைவில் கல்முனையில் நவீன வசதிகள் கொண்ட மின் ஒளியிலான விளையாடு அரங்கின் நிருமானம், சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திகளை துரிதப்படுத்துவதாகவும் கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள மைதானத்தை விசாலப்படுத்தி அதனையும் பொதுமக்களின் பாவனைக்காகவும் விளையாட்டு தவிர்ந்த ஏனைய உடற்பயிற்சி செயர்ப்பாடுகளுக்கு உதவக்கூடிய வகையில் வடிவமைத்துத் தருவோம்

அதேவேளை கல்முனை பால்கன் விளையாட்டுக்கழகத்தின் சமூகம் சார்ந்த செயர்ப்படுகளை பாராட்டுவதாகவும் முதற்க்கட்டமாக தனது சொந்த நிதியில் இருந்து ரூபா. 50,000.00 ஐ வழங்கி வைப்பதாவும் இனிவரும் காலங்களில் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கழகத்தின் உதவுவதாகவும் உறுதியளித்தார்.

இறுதியாக பிரதி அமைச்சர் கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் சமூகத்திற்கான அர்பணிப்பு மிக்க சேவை மற்றும் கல்முனை சார் அபிவிருத்தி செயர்ப்பாடுகளைப் கௌரவிக்கு முகமாக பிரதி அமைச்சர் அவர்களுக்கு பால்கன் விளையாட்டுக்கழகத்தின் சார்பாக அதன் தலைவர் யூ. கே. லாபிர் பொன்னாடை அணிவிக்க கழகத்தின் பொருளாளர் எம்.ஐ. எம் நைசர் அவர்கள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்கள்.

இவ் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக பிரதி அமைச்சர் கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ பாவா மற்றும் பாருக் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading