கட்டிலின் கீழ் நடந்தது என்ன? அனுராதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்

அனுராதபுரம் மஹாநெலுவெவ பிரதேசத்தை சேர்ந்த வீடு ஒன்றினுள் முதலை ஒன்று புகுந்தமையினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த முதலை வீட்டு விராந்தையில் உறங்கிக்கொண்டிருந்த முதியவர் ஒருவரின் கட்டிலுக்குக் கீழ் மறைந்து இருந்துள்ளதை தூக்கத்தில் இருந்து எழும்பிய நிலையிலேயே கண்டுள்ளார்.

சுமார் ஒன்பது அடி நீளமுள்ள குறித்த முதலை அருகிலிருந்த நீர் நிலையொன்றிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இச் சம்பவமானது இன்று அதிகாலை நித்திரைவிட்டு எழுந்த முதியவர் கட்டிலுக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த வெற்றிலை இடிக்கும் உரலை எடுப்பதற்காக குனிந்தபோது குறித்த முதலை வாயைப் பிழந்தவண்ணம் இருப்பதை அவதானித்து பதற்றமடைந்த நிலைக்குள்ளானார்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தினூடாக, வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்ததற்கிணங்க அவர்களால் குறித்த முதலை மீட்டுச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *