Local

கடந்த எட்டு வருடங்களில் 43 இலட்சம் கடவுச்சீட்டுகள்

இலங்கையில் கடந்த எட்டு ஆண்டுகளுள் 43 இலட்சத்து 68 ஆயிரத்து 340 பேர் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை தெரிவிக்கின்றது.

இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 27 மாதங்களில் மாத்திரம் 26 இலட்சத்து 40 ஆயிரத்து 640 பேர் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த 27 மாதங்களில் 6 இலட்சத்து 84 ஆயிரத்து 100 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகங்களில் பதிவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக அதிகளவானோர் கடந்த 2023ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளனர்.

அந்த எண்ணிக்கை 2இலட்சத்து 97 ஆயிரத்து 656 ஆகும்.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுள் சுமார் 30 இலட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களித்திருக்கவில்லை.

அவர்களுள் அதிகமானோர் வெளிநாடுகளில் இருக்கலாம் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விசேடமாக, பொருளாதார சிக்கல்கள் காரணமாக இவர்கள் வெளிநாடு சென்றிருப்பதாக நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading