முதன்முதலாக 5 பந்துகளில் முடிந்த கிரிக்கெட் போட்டி!
மலேசியாவின் பாங்கியில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பைக்கான ஆசியா குவாலிஃபையர் ஏ போட்டியில், சிங்கப்பூருக்கு எதிராக மங்கோலியா 10 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது, சர்வதேச ஆண்களுக்கான டி20 போட்டியில் அடிக்கப்பட்ட மிககுறைவான ஸ்கோர் என்ற மோசமான சாதனையை சமன்செய்தது.
கடந்த ஆண்டு ஸ்பெயினுக்கு எதிராக ஐல் ஆஃப் மேன் பதிவு செய்த 10 ரன்கள் என்ற சாதனையை மங்கோலியா அணி சமன் செய்தது.
மங்கோலியா மற்றும் சிங்கப்பூர் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மங்கோலியா அணி, சிங்கப்பூரின் லெக் ஸ்பின்னரான ஹர்ஷா பரத்வாஜின் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது.
4 ஓவர்களை வீசி 2 மெய்டன் ஓவர்களுடன் 3 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றி மங்கோலியா அணியை சிதறடித்தார் பரத்வாஜ்.
10 ஓவர்கள் தாக்குபிடித்து விளையாடிய மங்கோலியா அணி 10 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. 5 வீரர்கள் 0 ரன்னும், 4 வீரர்கள் 1 ரன்னும், 2 வீரர்கள் 2 ரன்களும் எடுத்தனர்.
11 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சிங்கப்பூர் அணி 0.5 ஓவர் ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றிபெற்றது. குவாலிஃபயர் போட்டியில் சிங்கப்பூர் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. மங்கோலியா அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.