கோட்டாவின் வழியில் அநுர குமார!
சிலர் வரியைக் குறைப்பதாக சொல்கிறார்கள். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது வரிக் குறைப்புச் செய்ததாலேயே அவரின் ஆட்சி சரிவைக் கண்டது. அந்த நிலை மீண்டும் வரக்கூடாது என்பதாலேயே நாம் கடன் வாங்குவதையும், பணம் அச்சிடுவதையும் நிறுத்தியுள்ளோம்.
இனிவரும் காலங்களில் உற்பத்தியை அதிகப்படுத்தி, தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியுள்ளது. அதேபோல் வரிச் சுமையை குறைத்து, நிவாரணத் திட்டங்களையும் பலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரித்தால் வரிச் சுமையைக் குறைக்க முடியும்.
நாம் தொடர்ந்தும் இறக்குமதிப் பொருளாதாரத்தின் மீது தங்கியிருக்க முடியாது. ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனை செய்யாவிட்டால் நாம் மீண்டும் நெருக்கடிக்குள் விழுவோம். நாம் முன்னோக்கிச் செல்ல பொருளாதார மாற்றமொன்று அவசியம்.
அதற்காகவே இயலும் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை ஐந்து முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டு முன்வைத்துள்ளேன். இன்று பல பொருட்கள் விலை குறைந்துள்ளன.
அடுத்த சில வருடங்களில் மக்களின் சுமைகளை முற்றாக குறைக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். எனவே ரூபாயின் பெறுமதியை பலப்படுத்தி அதனைச் செய்வோம். – ஜனாதிபதி