Jobs

களுத்துறை நகரில் மாபெரும் உயர்கல்வி, தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு.

 

எதிர்வரும் 08.09.2024 ஆம் திகதி மாணவர்களுக்கு சரியான கல்வி வழிகாட்டல்களை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்துவது ஒரு சமூக கடமை ஆகும். சர்வதேச ரீதியில் அவர்களை தயார்படுத்தி எதிர்கால சவால்களை முறியடிக்கக்கூடிய வகையில் அவர்களை உருவாக்க வேண்டியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு களுத்துறையில் அமைந்துள்ள சமூக தொண்டு நிறுவனமான களுத்துறை அபிவிருத்தி அமைப்பு (KDC) மற்றும் அமேசன் உயர்கல்வி நிறுவனமும் இணைந்து எதிர்வரும் 08.09.2024 ஆம் திகதி களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் காலை 9:30 முதல் 12:30 வரை இலவச உயர்கல்வி, தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் G.C.E (O/L ) மற்றும் G.C.E (A/L ) மாணவர்களும், பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர், உயர்கல்வி மற்றும் தொழில் தேடுகின்றவர்களும் கலந்து கொள்ள முடியும்.

இது முற்றிலும் இலவசமான நிகழ்ச்சியாகும், பெற்றோர்களும் வருகை தருவது மிகவும் பொருத்தமானதாகும்.
வருகை தரும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். ஆகவே நீங்களும் உங்கள் நண்பர்களுடன் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.

இந்த நிகழ்வுக்கு வளவாளராக பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும், அமேசன் உயர் கல்வி நிறுவன பணிப்பாளருமான திரு. இல்ஹாம் மரிக்கார் வருகை தரவுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு : 0765 770 733

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading