Cinema

பாம்பின் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட நடிகை ஸ்ரீதேவி?

இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையான ஸ்ரீதேவி தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்த வளர்ந்தார்.

இவர் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற நடிகையாக சிறந்து விளங்கி வந்தார். 1969 இல் துணைவன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வேதமிட்டு நடித்தார் நடிகை ஸ்ரீதேவி. தன்னுடைய முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த திரைப்படம் அவருக்கு பெயரும் புகழும் பெற்றுத் தந்தது.

கதாநாயகியாக இவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த “மூன்று முடிச்சு” திரைப்படம் தான். 1976 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. ஆரம்ப காலத்தில் கமலஹாசன் ரஜினிகாந்த் உடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார் நடிகை ஸ்ரீதேவி.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் எண்ணற்ற படங்களில் நடித்து தமிழ் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்துக்கொண்டார் . ஸ்ரீதேவி மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பல்வேறு உயரிய விருதுகளையும் பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

இதுவரை கிட்டத்தட்ட 300 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ஸ்ரீதேவி புகழின் உச்சத்தில் இருந்த போதே பாலிவுட் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக போனி கபூரை காதலித்து 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதனிடையே நடிகர் ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ஆனால், அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக அவரது குடும்பத்தார் மற்றும் கணவர் போனி கபூர் உள்ளிட்டோர் கூறினார்கள் .

இருந்தாலும் இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இதையடுத்து துரித விசாரணை மேற்கொண்டதில் நடிகை ஸ்ரீ தேவி மாரடைப்பு ஏற்பட்டு இயற்கையான முறையில் தான் மரணம் அடைந்தார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஆன செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அதிர்ச்சிக்குரிய வகையில் ஒரு விஷயத்தை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

நடிகை ஸ்ரீதேவி கடந்த 2015 ஆம் ஆண்டு தனது குடும்ப திருமண விழா ஒன்றிற்காக துபாயில் சென்று கலந்து கொள்கிறார். அங்கே இரவு நேரத்தில் மெஹந்தி டான்ஸ் போன்ற திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த திருமண விழாவுக்காக நடிகை ஸ்ரீதேவி தனது குடும்பத்துடன் ஹோட்டல் அறை ஒன்றில் போய் தங்குகிறார்.

ஹோட்டல் அறையில் தங்கிய ஸ்ரீதேவி மறுநாள் காலை எழுந்து பார்க்கும் போது அந்த ஹோட்டல் அறையின் பாத்ரூமில் இருந்த பாத் டப்பில் பிணமாக படுத்து கிடக்கிறார். அந்த புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகிறது துபாய் பொலிஸார் இந்த விசாரணையை மேற்கொண்டனர்.

ஆனால், அதற்குள் இந்திய மீடியாக்கள் மிகவும் பரபரப்பாக பேசிவந்தது. அந்த செய்தி உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தற்கொலையும் கிடையாது. இயற்கையான மரணமும் கிடையாது. இது கிட்டத்தட்ட கொலையாக தான் இருக்கும் என போனி கபூர் மீதே மொத்த சந்தேகமும் விழுகிறது.

அது குறித்து செய்திகளில் பல பேர் பல விதமான செய்திகளை வெளியிடுகிறார்கள். குறிப்பாக ரூ.240 கோடிக்கு ஸ்ரீ தேவி மீது லைஃப் இன்சூரன்ஸ் ஒன்று போடப்பட்டிருக்கிறது.

அந்த இன்சூரன்ஸ் கிளைம் பண்ணி வாங்க வேண்டும் என்றால் இதுபோன்று சம்பந்தப்பட்ட நபர் இறந்து விட்டால் தான் முடியும் என்பதால் திட்டமிட்டு ஸ்ரீதேவியை கொலை செய்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும், போனி கபூர் ஸ்ரீதேவியிடம் இருந்த மிகப்பெரிய சொத்து ஒன்றை அவரிடம் இருந்து வாங்குவதற்காக அவரிடமே கையெழுத்து வாங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியது. இப்படி வித விதமாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த சமயத்தில் துபாய் பொலிஸார் விசாரித்துவிட்டு அவர்களது தரப்பிலிருந்து ஒரு தெளிவான அறிக்கை ஒன்றையும் கொடுத்தார்கள் .

அதாவது நாங்கள் போனி கபூரிடமும் விசாரித்து விட்டோம். முழுமையாக புலனாய்வு செய்தோம். இது தற்செயலாக நடந்த ஒரு மரணம் தான் என கூறி பேசி முடித்துவிட்டார்கள்.

இந்த விஷயம் இப்படியாக மறைக்கப்பட்டதை அடுத்து “தீப்தி பின்னிடி” என்ற ஒரு பெண் தொழிலதிபர் ஸ்ரீதேவிக்கு ஜப்பானை சேர்ந்த பாம்பின் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக கூறி அதிரவைக்கிறார்.

ஸ்ரீதேவியின் உயிரை எடுத்த ஜப்பான் பாம்பு,
இந்த பாம்பின் விஷம் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீதேவியின் உடல் உறுப்புகளை அழித்து வந்ததாகவும். கிட்டத்தட்ட ஸ்லோ பாய்சன் போல் அவரை கொன்று வந்ததாக அவர் கூறியிருக்கிறார்.

அதற்கான ஆதாரமும் என்னிடம் இருக்கு, நான் சுப்ரீம் கோர்ட்டில் சென்று இது சம்பந்தமான தகவல்களை கொடுக்கப் போகிறேன் என கூறிய அதிர வைத்தார்.

உடனே ஒட்டுமொத்த இந்திய மீடியாக்களும் யார்யா இந்த தீப்தி பின்னிடி? என்று பார்த்த போது,

அவர் ஸ்ரீதேவினுடைய மிகத்தீவிரமான ரசிகையாம். இது குறித்து கூறிய அவர் நான் தற்போது ஈவண்ட் மேனேஜ்மென்ட் தொழில் ஒன்றை நடத்தி வருகிறேன். உத்திரபிரதேசம், லக்னோவில் என்னுடைய தொழில் சார்ந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நான் ஸ்ரீதேவிக்கு அழைப்பு விடுத்திருந்தேன்.

அவரிடம் பேசிவிட்டு கிட்டத்தட்ட எல்லாவற்றிற்கும் ஓகே சொல்லிவிட்டார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் நிகழ்ச்சி நடைபெற ஒரு வாரம் தான் இருக்கிறது.

அதற்குள் ரீதேவியின் மரண செய்தி வந்து பேரதிர்ச்சி கொடுத்தது. இந்த மரணத்தை ஒரு ரசிகையாக என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதனால் நான் என்னுடைய தனிப்பட்ட முறையில் செலவு செய்து துபாயில் உள்ள சில தனியார் துப்பறிவும் ஏஜெண்டுகளின் மூலம் விசாரணை மேற்கொண்டேன்.

அதில் நடிகை ஸ்ரீதேவிக்கு கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்கு முன்பு ஜப்பானை சேர்ந்த பாம்பின் விஷயத்தை உணவில் கலந்து கொடுத்துள்ளது தெரியவந்தது. கிட்டத்தட்ட கொஞ்சம் கொஞ்சமாக அவரது ஆர்கான்களை செயலிழக்க வைக்கும் வகையில் ஸ்லோ பாய்சன் கொடுத்துக் கொன்றிருக்கிறார்கள்.

இந்த செயலை அவரது குடும்பத்தார் திட்டமிட்டு செய்ததாக இருக்கக்கூடும் என தீப்தி பென்னடி கூறியிருக்கிறார். இது முழுக்க முழுக்க திட்டமிட்ட கொலை என்பது அப்பட்டமான தெரிகிறது. கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்கு முன்னாடியே அவரது உணவில் விஷத்தை கொடுத்து விட்டார்கள்.

இந்த திருமணத்திற்கு செல்லும் போது அந்த திருமணத்தில் நடனமாடி கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்து விட்டார் என கதை கூறுவதற்கு வசதியாக இருப்பதற்காக இது போன்ற வேலைகள் செய்யப்பட்டு இருக்கிறது.

முழுக்க முழுக்க திட்டமிட்டு செய்யப்பட்ட இந்த கொலை பார்ப்பவர்களுக்கு இயற்கை மரணம் போலவே தெரிய வேண்டும் என்பதற்காக தனது உறவினர்கள் முன்னிலையில் ஸ்ரீதேவியை மரணிக்க வைத்திருக்கிறார்கள்.

எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை இதற்கான அத்தனை ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. நான் இதை சுப்ரீம் கோர்ட்டில் சென்று கொடுத்து வழக்கு தொடர இருக்கிறேன் என தீப்தி கூறி அதிரவைத்தார்.

இந்த விவகாரம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே அதிர வைத்தது. முன்னதாக நடிகர் போனி கபூர் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து தெரிவிக்கும் போது இது கொலை இல்லை, இது முழுக்க முழுக்க இயற்கையாக நடந்த மரணம் தான்.

யாரும் திட்டமிட்டு கொலை செய்யவில்லை. அது மட்டும் இல்லாமல் இந்திய மீடியாக்கள் பலபேர் என்னை கொலை குற்றவாளியாகவே கருதி பலவிதங்களில் செய்திகளை எழுதினார்கள் .

அதனால் துபாய் பொலிஸார் என்னை கடைசி கட்டம் வரை சென்று விசாரித்தனர். நான் அவர்களுக்கு கடைசி வரை ஒத்துழைத்தேன். உண்மையில் ஸ்ரீதேவியின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது அவர் டயாபடீஸ் நோய் உடையவர் அவரது உணவில் உப்பை அறவே தவிர்த்து வந்தார்.

அது மட்டுமில்லாமல் நேரத்திற்கு சரியாக சாப்பிட மாட்டார். டயட் இருந்து அவர் தனது உடலை கெடுத்துக் கொண்டார். அதே நேரத்தில் ஸ்ரீதேவி சரியாக மருந்து மாத்திரைகளை எடுக்காமல் இருந்தார். இதனால் லோ பிபி ஆகி பாத் டப்பில் மயங்கி விழுந்து அவர் இறந்துவிட்டார் .

இதுதான் உண்மையில் நடந்தது. எனவே ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையான மரணம் தான் என போனி கபூர் கூறியிருந்தார் .

இருந்தாலும் இந்த பாம்பின் விஷம் கொடுத்து ஸ்ரீதேவியின் உடலை குடும்பத்தாரே பறித்து விட்டார்கள் என தொழிலதிபர் தீப்தி கூறி இருக்கும் இந்த விஷயம் ஒட்டுமொத்த இந்திய இந்திய சினிமாவையே கொலை நடுங்க செய்திருக்கிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading