சுமந்திரன், சாணக்கியனின் ஆதரவு யாருக்கு?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் அநேகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக இன்று காலை தெரிவித்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே இன்று(04) நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் எந்தவிதக் கருத்தும் தெரிவிக்காது அங்கிருந்து நழுவிச் சென்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்திருந்தார்.
என்றாலும் அவரது நாடாளுமன்ற இன்றைய உரையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது போல் சொல்லாமல் சொன்னார் என்றே நினைக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இதன்போது இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் இருந்து எழுந்து செல்ல முற்பட்ட நிலையில் அவரை சபையில் அமருமாரும் மதுர விதானகே மேலும் கேட்டுக் கொண்டார்.