Jobs

Puttalam Picta தகவல் தொழில்நுட்ப சமூக தொண்டு அமைப்புக்கு Vavuniya பல்கலைக்கழகத்தின் உடனான ஒப்பந்தம்.

 

புத்தளத்தில் இயங்கி வரும் Picta (Puttalam ICT Association) தொண்டு நிறுவனம் 02.08.2024 ஆம் திகதி Vavuniya பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்துடன் ஒரு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டது.

இதில் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தல், மனிதவள மேம்பாட்டு திட்டங்கள், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் மேற்கூறப்பட்ட திட்டங்களை விரிவுபடுத்தல் போன்ற பல செயற்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் மூலம் இரண்டு ஒப்பந்ததாரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என Picta அமைப்பின் தலைவர், I – SOFT நிறுவனத்தின் பணிப்பாளர் Afras Kabeer தெரிவித்தார்.

புத்தளத்திற்கு பல கல்வி சார் வாய்ப்புகள் பெறுவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும் என Picta அமைப்பின் தேசிய அமைப்பாளரும் Amazon College & Campus இன் பணிப்பாளருமான திரு. Ilham Marikar தெரிவித்தார்.

இந்த நிகழ்வுக்கு Picta அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான VTA இன் விரிவுரையாளர் F.M. Anshaf அவர்களும் Puttalam Picta அமைப்பின் இணைப்பாளர் Sri Sutharsan, Vavuniya ICT அமைப்பின் தலைவர் Andrew Ansley மேலும் Vavuniya பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் A. Pushpanathan, Vavuniya பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் பேராசிரியர் Yogarajah Nandagopan, கலாநிதி Alexander Ansley, Dr. Alexander Rukshan, ADSFLY நிறுவனத்தின் பணிப்பாளர், Picta சங்கதின் செயலாளர் Ruslan Rasooldeen ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading