பிரபல காமெடி நடிகருக்கு மனைவியாகிறார் நடிகை லட்சுமி மேனன்
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகம் ஆன புதிதிலேயே தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை லட்சுமி மேனன்.
கடந்த 2012 ஆம் ஆண்டில் சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் .
முதல் படத்திலிருந்து தென் இந்திய பிலிம் ஃபேர் அறிமுக நடிகைக்கான விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது .
மஞ்சப்பை, பாண்டி நாடு, நான் சிகப்பு மனிதன், ஜுகர் தண்டா, கொம்பன், றெக்க, புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக லக்ஷ்மி மேனன் வலம் வந்து கொண்டிருந்தார்.
இவர் பள்ளி படிப்பை படித்துக் கொண்டிருக்கும் போதே சினிமாவில் அறிமுகமாகி இளம் நடிகையாக கலக்கிக் கொண்டிருந்தார்.
நல்ல வட்ட வடிவமான முக ஜாடை கொண்டு ஹோமியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்துபவராக லட்சுமிமேனன் இருந்தார்.
இதனால் ரசிகர்களின் கவனத்தை மிக குறுகிய காலத்திலேயே ஈர்த்து விட்டார். அதன் பிறகு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த லட்சுமிமேனனுக்கு தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்து விட்டார்.
மீண்டும் இரண்டாவது இன்னிசை தொடங்க ஆரம்பித்த அவர் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பிறகு சினிமா பக்கம் வந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைக்க முயற்சித்து சமூக வலைதளங்களில் தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வந்தார்.
அதன் மூலம் தற்போது பிரபல காமெடி நடிகரான யோகி பாபுவின் மனைவியாக நடிகை லட்சுமிமேனன் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகி இருக்கும் தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்படுகிறது.
யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் மலை திரைப்படத்தில் லட்சுமிமேனன் அவரின் மனைவியாக நடிக்கிறார்.
யாருன்னு பாருங்க:
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. மலை படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உலா வந்து கொண்டிருக்கிறது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஒரு காலத்தில் எப்படி இருந்த ஹீரோயின் இப்ப யோகி பாபுவுக்கு ஜோடியா நடிக்கிற அளவுக்கு பாவம் இவங்க நிலைமை இப்படி ஆகி போச்சே என பரிதாபத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இருந்தாலும் இந்த திரைப்படத்தில் லட்சுமிமேனன் தன்னுடைய நடிப்பை சிறப்பாக ஸ்கோர் செய்தால் அதுவே அவருக்கு மாபெரும் வெற்றியாகும். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.