வர்த்தகத்தை பாதித்துள்ள சட்ட விதிகள் தளர்த்தப்படும்
வர்த்தகத்தை பாதித்துள்ள பல சட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, வர்த்தகர்களின் பணிகளுக்கு வசதியாக புதிய நிறுவன அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மத்திய மாகாணத்தை சுற்றுலாத்துறையின் முக்கிய மையமாக மாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது வலுயுறுத்தினார்.