World

காலியாக கிடக்கும் சிறைச்சாலைகள்

குற்றவாளிகள் பற்றாக்குறை காரணமாக ஐரோப்பிய நாடு ஒன்றில் கிட்டத்தட்ட சிறைச்சாலைகள் காலியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பல நாடுகள் நெரிசலான சிறைச்சாலைகளுடன் போராடும் போது, ஐரோப்பிய நாடான நெதர்லாந்து மட்டும் மிகவும் வித்தியாசமான சவாலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

தற்போது நெதர்லாந்து குற்றத்தில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது, இதனால் ஒரு காலத்தில் அதிக சிறைவாசிகளுக்காக அறியப்பட்ட நெதர்லாந்து, தற்போது இதன் விளைவாக காலியான சிறைச்சாலைகளை எதிர்கொண்டு உள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 19 சிறைகள் மூடப்பட்டுள்ளன, மேலும் பல சிறைகள் அடுத்த ஆண்டு மூடப்பட உள்ளன.

காலியாக கிடக்கும் சிறைச்சாலைகள்: ஐரோப்பிய நாடொன்றில் குற்றவாளிகள் பற்றாக்குறை! | Criminal Shortage Empty Prisons In Netherlands

நெதர்லாந்தில் குற்ற விகிதங்கள் குறைவதற்கு பல காரணிகள் உள்ளன. ஒரு முக்கிய காரணி தண்டனையை விட மறுவாழ்வு மீதான நாட்டின் வலியுறுத்தல் ஆகும்.

கைதிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் சமூகத்தில் மீண்டும் இணைவதற்கு உதவும் திட்டங்களில் நெதர்லாந்து அரசு அதிக கவனம் செலுத்துகிறது, இதனால் மீண்டும் குற்றம் செய்யும் வாய்ப்பு குறைகிறது.

இந்த முயற்சிகள் நேர்மறையான முடிவுகளை தந்துள்ளதால், இதன் விளைவாக குற்றச் செயல்பாடுகள் குறைந்துள்ளன.

காலியாக கிடக்கும் சிறைச்சாலைகள்: ஐரோப்பிய நாடொன்றில் குற்றவாளிகள் பற்றாக்குறை! | Criminal Shortage Empty Prisons In Netherlands

குற்றம் குறைவது நிச்சயமாக ஒரு நேர்மறையான வளர்ச்சியாக இருந்தாலும், இது நெதர்லாந்துக்கு புதிய சவால்களை முன்வைத்துள்ளது.

அதாவது போதுமான கைதிகள் இல்லாமல் சிறை உள்கட்டமைப்பை பராமரிப்பு செலவு  உயர்ந்துள்ளது.

மேலும் அரசாங்கம் இந்த கட்டிடங்களுக்கு மாற்று பயன்பாடுகளை ஆராய்ந்து வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading