Gossip

மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்

தனது மனைவியை காதலனுக்கு கணவர் திருமணம் செய்து வைத்த சம்பவம் ஒன்ற பிஹார் மாநிலம் லக்கிசராயில் நடந்துள்ளது.

பிஹார் மாநிலம் லக்கிசராய் மாவட்டம் ராம்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (26). இவரது மனைவி குஷ்பூ குமாரி (22).

கடந்த 2021இல் திருமணமான இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், குஷ்பூ குமாரி, அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தன் குமார் (24) என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். ஆனால் அதற்கு முன்னதாக, ராஜேஷ் குமாருக்கு தனது மகளை குஷ்பூவின் பெற்றோர் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

பழைய காதலை மறக்க முடியாமல் குஷ்பூ குமாரி தவித்து வந்தார். ஒரு நாள் இரவு ராஜேஷ் இல்லாத நேரத்தில் சந்தன் குமார், குஷ்பூவைச் சந்திக்க அவரது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ராஜேஷ் குமாரின் தம்பிகள், குஷ்பூவையும், சந்தன் குமாரையும் கையும் களவுமாகப் பிடித்துவிட்டனர்.

இதையடுத்து மறுநாள் காலை குஷ்பூவையும், சந்தன் குமாரையும் பஞ்சாயத்தார் முன்னிலையில் நிறுத்தினர்.

அப்போது அங்கு வந்த கணவர் ராஜேஷ் குமார், தனது மனைவியை காதலர் சந்தனுக்கே திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார்.

பின்னர் இருவரின் சம்மதத்துடன் அங்குள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து குழந்தையை தன்னுடன் வைத்துக்கொண்டு மனைவியை காதலனுடன் மகிழ்ச்சியாக அனுப்பி வைத்துள்ளார் ராஜேஷ்.

இதுகுறித்து ராஜேஷ் கூறும்போது, “அவர்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கட்டும். அவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். நான் மகனுடன் வாழ்வேன்” என்றார்.

குஷ்பூ குமாரி கூறும்போது, “எனது காதலருடன் என்னைப் பார்த்ததும் எனது கணவர் இந்தத் திருமணத்துக்கு சம்மதித்தார். அவருக்கு எனது நன்றிகள். இனி, நான் என்னுடைய புதிய கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்வேன்” என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading