சாதிக்கக் கற்றுத் தந்தவர் சூர்யா! நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி.
தமிழில் 1997-ல் வெளியான ‘நேருக்கு நேர்’ படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்த சூர்யா தொடர்ந்து நந்தா, காக்க காக்க, பிதாமகன், கஜினி, அயன், சிங்கம், ஜெய்பீம் போன்ற பல வித்தியாசமான படங்கள் மூலம் திறமையான நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
‘சூரரைப்போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். இந்த நிலையில் சூர்யா தனது 49-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி சமூகவலைத்தளத்தில் சூர்யா குறித்து நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவில், பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கினாலும் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் எதையும் சாதிக்க முடியும் என்று எனக்கு கற்றுத் தந்தவர் சூர்யா. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். எங்களுக்கு ரசிகர்கள் அன்பைக் கொடுத்து சமூகத்திலும் அன்பை பரப்புகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
நன்றி: தினந்தந்தி.