சானியா மிர்சா – முஹம்மத் சமி திருமணம்?
இந்தியாவில் பிரபல டென்னிஸ் நட்சத்திரமாக வலம் வந்தவர் சானியா மிர்சா. இவர், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார்.
இந்த ஜோடி அண்மையில் பிரிந்தனர். சோயிப் மாலிக் பாகிஸ்தான் டெலிவிஷன் நடிகை ஒருவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், சானியா மிர்சா இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் கடந்த சில மாதங்களாகவே காட்டுத் தீப் போல் பரவின.
இந்த வதந்திகளுக்கு தீனி போடும் வகையில் ஏதாவது ஒரு செய்தியை 10 நாள்களுக்கு ஒருமுறை பரப்பி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பான வதந்திகளை முகம்மது ஷமி நிராகரித்துள்ளார்.
பிரபல யூட்யூபர் சுபாஷ்கர் மிஸ்ராக்கு அளித்த பேட்டியில் முகம்மது ஷமி இதனை தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பக்கூடாது” என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, விராத் கோலி, ரோகித் சர்மாவின் டி20 ஓய்வு குறித்து அதிர்ச்சி தெரிவித்த முகம்மது ஷமி, “விராத் மற்றும் ரோகித்தின் ஓய்வை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவின் தூண்கள் அவர்கள்” என்றார்.