மண்ணை கவ்விய இந்தியா: முதல் T20யில் வெற்றி வாகை சூடிய ஜிம்பாப்வே!

 

இந்திய அணியை 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு இரண்டாவது ஓவரில் முகேஷ் குமார் அதிர்ச்சியளித்தார்.

தொடக்க ஆட்டக்காரரான இன்னொசென்ட் கையா கிளீன் முகேஷ் குமார் பந்தில் போல்டு ஆகி வெளியாகினார்.

பின்னர் வந்த பிரையன் பென்னெட் 22 ஓட்டங்களும், மதேவேரே 21 ஓட்டங்களும் எடுத்த நிலையில் ரவி பிஸ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்கள் குவித்தது.

இந்திய அணியின் தரப்பில் பிஸ்னோய் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

சுலபமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க வீரரான அபிஷேக் சர்மா ஓட்டங்கள் எதுவும் குவிக்காமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

பின்னர் வந்த ருதுராஜ் (7 ஓட்டங்கள்), ரியான் பராக்(2 ஓட்டங்கள்), ரிங்கு சிங்(0 ஓட்டங்கள்), மற்றும் துருவ் ஜூரல்(6 ஓட்டங்கள்) குவித்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ஓரளவு தாக்குபிடித்த வாஷிங்டன் சுந்தர் 27 ஓட்டங்கள் குவித்தார். பொறுப்புடன் விளையாடி வந்த கேப்டன் சுப்மன் கில் 31 ஓட்டங்கள் குவித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

இறுதியில் இந்திய அணி 19.5 ஓவர்கள் முடிவில் 102 ஓட்டங்கள் குவித்து போட்டியில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.

ஜிம்பாப்வே அணியில் தென்டை சத்தரா 3 விக்கெட்டுகளையும், சிக்கந்தர் ராசா 3 விக்கெட்டுகளையும் பறித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *