இறந்த காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்!

மலேசியாவில் திருமண பந்தத்தில் இணைய தயாராக இருந்த நிலையில், கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த காதல் ஜோடிக்கு அவர்களது பெற்றோர் பேய் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஜிங்ஷன் என்ற இளைஞன், லீ என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஜூன் 2 ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கடந்த மே 24 ஆம் திகதி அந்த காதல் ஜோடி ஒரு கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தால் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்த இரு குடும்பத்தினரும், அவர்களது உயிர் பிரிந்தாலும், குறிப்பிட்ட நாளில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி, ஒரு மண்டபத்தில் இறந்த காதல் ஜோடியின் புகைப்படம் மற்றும் அவர்களைப் போன்ற உருவ பொம்மைகளை வைத்து பேய் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த பேய் திருமணத்தால் உயிரிழந்த காதல் ஜோடி மீண்டும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த சடங்கு நடத்தப்பட்டது.

இந்த விநோத திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *