லோட்டஸ் டயர் விற்பனை ஊக்குவிப்புத் திட்டத்தின் வெற்றியாளர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் தங்கி பொழுதை கழிப்பதற்கான அரிய வாய்ப்பு

இலங்கையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையினை பெரிதும் வென்றுள்ள, லோட்டஸ் டயர்களை உற்பத்தி செய்து விநியோகித்து வரும் சேம்சன் இறப்பர் கைத்தொழில் நிறுவனம் தமது பெறுமதிமிக்க விற்பனை முகவர்களையும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு நட்சத்திர ஹோட்டலொன்றில் தங்கியிருந்து பொழுதை கழிப்பதற்கான வாய்ப்பினை மீண்டுமொரு முறை வழங்கியுள்ளது.

அந்த வகையில் லோட்டஸ் டயர் விற்பனை முகவர்களுக்கும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கும் நட்சத்திர ஹோட்டலான RIU – Ahungalle ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து மகிழ்ச்சியாகவும் குதூகலத்துடனும் பொழுதை கழிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கு முன்னரும் RIU – Ahungalle ஹோட்டலில் இந்த வாய்ப்பை வழங்கியிருந்த லோட்டஸ் டயர் நிறுவனம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இந்த ஊக்குவிப்பு திட்டத்தை லோட்டஸ் டயர் விற்பனை முகவர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். கடந்த ஆண்டில் விற்பனை இலக்குகளை பூர்த்தி செய்த விற்பனை முகவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விற்பனை ஊக்குவிப்புத் திட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கே இந்த அரிய கிடைத்துள்ளது.

இந்நிகழ்வில் சேம்சன் இறப்பர் கைத்தொழில் நிறுவனத்தின் நிர்வாகத்தினரும் லோட்டஸ் டயர் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் குழுவினரும் கலந்து கொண்டனர். “லோட்டஸ் டயர் குடும்ப அங்கத்தவர்களின் சங்கமமாக தான் நாம் இதை பார்க்கிறோம்.

ஆகவே, நாம் இந்த திட்டத்தை இலக்குகளை அடைவதை காட்டிலும் பரஸ்பர உறவை வலுவூட்டுவதை நோக்கமாக கொண்டே நடத்துகின்றோம்.” என லோட்டஸ் டயர் நிறுவனத்தின் வர்த்தக முகாமையாளர் தெரிவித்தார். “சரியான விலைக்கு……. சீரான தூரம்…..” எனும் தொனிபொருளின் ஊடாக நாடெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் நெருக்கமாக உள்ள லோட்டஸ் டயர்கள் பல தசாப்தங்களாக பெரும் வரவேற்பை பெற்றதொரு டயர் வர்த்தகநாமமாகும். செலுத்தும் தொகைக்கு கூடுதல் நியாயத்தை வழங்கும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உயர் தரத்திலான லோட்டஸ் டயர் உற்பத்திகளில் சைக்கிள் டயர்கள் மற்றும் டியூப்கள், மோட்டார் சைக்கிள் டயர்கள் மற்றும் டியூப்கள், முச்சக்கர வண்டி டயர்கள் மற்றும் டியூப்கள் உள்ளிட்ட பல உற்பத்திகள் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *