100வது பிறந்தநாளைக் கொண்டாடும் இரட்டைச் சகோதரிகள்!

 

பிரித்தானியாவில் இரட்டைச் சகோதரிகள் தங்களின் 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில் அதற்கான இரகிசயத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

Anne Brown மற்றும் Florence Boycott பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாகப் பிறந்தநாளுக்காகச் சந்தித்துள்ளனர்.

இருவரும் பிரித்தானியாவின் – சவுத் யோர்க் ஷயர் பகுதியில் வசிக்கின்றனர். அங்கு பாய்காட் தங்கியிருக்கும் பராமரிப்பு இல்லத்தில் சந்திப்பு நடந்தது.

நண்பர்கள், குடும்பத்தினர் மத்தியில் அவர்கள் தங்களது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.

சிறு வயதில் தங்களின் தந்தையால்கூட இருவரையும் அடையாளம் காணமுடியாது என Brown தெரிவித்துள்ளார். 50 வயதில் இருந்ததுபோலவே இப்போதும் உணர்வதாக அவர் கூறினார்.

வாழ்க்கையை நேசிக்கவேண்டும், இரவில் சீக்கிரமாக உறங்கவேண்டும் என்பதே தங்கள் வாழ்க்கையின் இரகசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *