சர்வதேச ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை வீரர்
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி முடிவடைந்த நிலையில், 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
குறித்த அணியானது அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இலங்கை என்று அனைத்து அணிகளில் இருந்தும் சிறந்த வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதன் தலைவராக இந்திய அணியின் தலைவரான ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு இலங்கை வீரராக வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுசங்க மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை கீழ்கண்டவாறு அணியை பெயரிட்டுள்ளது.
ரோஹித் சர்மா, விராட் கோலி, டேரல் மிட்செல், குயின்டன் டி காக், கே.எல். ராகுல், கிளென் மேக்ஸ்வெல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, தில்ஷான் மதுசங்க, ஆடம் சாம்பா, முகமது ஷமி