எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

உலக மிகபெரும் பணக்காரரான எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராக உள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போது, உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் (டுவிட்டர்) நிறுவனங்களின் தலைவராக எலான் மஸ்க் இருந்து வருகின்றார்.

தென்னாபிரிக்காவில் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த எலான் மஸ்க். அவர் எப்படி உலக பணக்காரர் ஆனார் என்பதை பிரபல அமெரிக்க எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் புத்தகமாக எழுதி இருந்தார்.

இந்த புத்தகம் உலகம் முழுவதும் பலரின் கவனத்தை பெற்று விற்பனையில் சாதனை படைத்தது.

இவ்வாறான நிலையில் இந்த புத்தகத்தை மையமாக வைத்து எலான் மஸ்க் வாழ்க்கை திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை அமெரிக்க திரைப்பட இயக்குநரான டேரன் அரோனோபிஸ்கி இயக்க உள்ளார். இவர் தி வேல், மதர், பை (Pi) உள்ளிட்ட பிரபல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *