இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் விளையாட தகுதிப் பெற்றது அவுஸ்திரேலிய!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெற்ற 2 ஆவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலிய அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா அணி தகுதி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய களம் இறங்கிய தென்னாபிரிக்கா அணி 49.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றது.

அதன்படி, 213 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 47.2 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் Travis Head அதிகபட்சமாக 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (19) இடம்பெறவுள்ள 2023 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *