தற்கொலை செய்ய நினைத்தேன்! நடிகர் கமல்ஹாசன்
சென்னை லயோலா கல்லூரியில் அரசியல் விழிப்புணவு தொடர்பாக மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்று பேசினார்.
அப்போது கமல்ஹாசனிடம், ’மன அழுத்தம் காரணமாக தற்கொலைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக இளம் வயதினர் இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறார்கள்.
இதனை தடுக்க உங்கள் அறிவுரை என்ன?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு, “‘தோல்வி படம் எடுக்காமல் இருப்பது எப்படி? என்று என்னிடம் கேட்பது போல இருக்கிறது. அதுவும் முயற்சி செய்திருக்கேன். 20, 21 வயதாக இருக்கும்போது தற்கொலை செய்துக் கொள்ளவும் யோசித்திருக்கிறேன்.
இந்த சினிமா உலகமும், கலை உலகமும் என்னை கண்டுகொள்ளவில்லையே என்ற ஏக்கத்தில் யோசித்து இருக்கிறேன்.
அதுபற்றி விவாதிக்கவும் செய்து இருக்கிறேன். வெற்றி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். ஒருபோதும் அவசரப்படக்கூடாது.
மரணம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி தான். மரணமில்லா வாழ்க்கை என்பது ஒரு முற்றுப்பெறாத செயல் போன்றது என்பதால் நாம் மரணிப்பது உறுதி.
அது வரும்போது வரட்டும், நீங்களாகவே தேடாதீர்கள்” என கூறினார்.