டயானா அணிந்த ஸ்வெட்டர் ஏலத்தில் 11 லட்சம் டொலர்களுக்கு விற்பனை
மறைந்த பிரித்தானிய இளவரசி டயானா அணிந்த ஸ்வெட்டர் ஏலத்தில் 11 லட்சம் டொலர்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
பிரித்தானிய அரச குடும்பத்தின் ஒரு பொருளுக்கு அதன் பெறுமதியை தாண்டி இப்படியான மிகப் பெரிய விலை கிடைத்திருப்பது இதுவே முதல் முறை.
பிரபல Sotheby’s நிறுவனம் நடத்திய ஒன்லைன் ஃபேஷன் ஐகான் ஏல விற்பனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இந்த ஸ்வெட்டரை 11 லட்சம் டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளார்.
இறுதி நாளான கடந்த வியாழக்கிழமை கடைசி 15 நிமிடங்களில், இந்த ஸ்வெட்டருக்கான அதிகபட்ச ஏலத்தொகை 1.90 லட்சம் டொலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இறுதி நிமிடத்தில் 11 லட்சம் டொலர்களுக்கு ஏலம் விடப்பட்டதாக Sotheby’s தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் Sotheby’s நடத்திய ஏல விற்பனையில் டயானா அணிந்த கவுன் 6 லட்சத்து 4 ஆயிரத்து 800 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.