அனிருத் – கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம்?

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த தசரா, மாமன்னன் ஆகிய இரண்டு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியதோடு வசூலையும் வாரிக்குவித்து சாதனை படைத்தது. இதையடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அரை டஜன் படங்கள் உருவாகி வருகின்றன. தமிழில் சைரன், ரிவால்வர் ரீட்டா, ரகுதாதா போன்ற படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி. இதுதவிர பொலிவுட் படமொன்றிலும் நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.

இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தொடர்பாக, அடிக்கடி திருமண வதந்திகள் பரவுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. அண்மையில் கூட அவர் துபாயை சேர்ந்த தனது நண்பருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டபோது அவர்தான் கீர்த்தி சுரேஷின் காதலன் என்று தகவல் பரவியது. பின்னர் அது வெறும் வதந்தி என கீர்த்தியே சொன்ன பின்னர் தான் உறுதியானது. இதையடுத்து தற்போது கீர்த்தி சுரேஷ் பற்றி மற்றுமொரு காதல் வதந்தி பரவி வருகிறது.

அதன்படி தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கும் அனிருத்தை கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாகவும், அவர்கள் இருவருக்கும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் பொலிவுட் ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களைப் பற்றி காதல் வதந்தி பறவுவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன் கடந்த 2020-ம் ஆண்டு அனிருத்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து கீர்த்தி பதிவிட்ட புகைப்படத்தால் அந்த சமயத்திலேயே இவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது.

இருப்பினும் அது வெறும் வதந்தி என தெரியவந்தது. ஆனால் இந்த முறை மீண்டும் அவர்கள் இருவரையும் வைத்து காதல் வதந்தி பரவியதால், ஒருவேளை உண்மையாக இருக்குமோ என சோசியல் மீடியாக்களிலும் பேச்சு அடிபட தொடங்கிய நிலையில், அதற்கு அப்படியே முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கீர்த்தி சுரேஷின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான சுரேஷ் மேனன், இதுவும் வதந்தி தான் என உறுதி படுத்தி இருக்கிறார். கீர்த்தியும் அனிருத்தும் ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *