7 மாதமாக மருமகளை பாலியல் வன்புணர்வு செய்துவந்த மாமனார்!

மகன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து மருமகளை 7 மாதங்களாக பலாத்காரம் செய்து வந்த புகாரின் பேரில் மாமனார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 26 வயதாகும் பெண் ஒருவர், தனது மாமனார் மீது புகார் அளித்திருக்கிறார். அவருக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் முடிந்துள்ளது. ஒரே வீட்டில் கணவர் மற்றும் மாமனாருடன் இந்த இளம் பெண் வசித்து வந்துள்ளார். கணவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து மாமனார் அவ்வப்போது பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மாமனார் மிரட்டியதாக கூறப்படுகிறது.
மாமனாரின் தொல்லைகள் எல்லை மீறி சென்ற நிலையில், அதுகுறித்து இளம் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே, மாமனார் பாலியல் தொந்தரவு கொடுத்ததை அறிந்த இளம்பெண்ணின் கணவர், வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
தற்போது பாதிக்கப்பட்ட பெண் அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் பாதிக்கப்பட்ட தனக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளார். இதனை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாமனார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகார் அளித்த பெண்ணிடம் இருந்தும் போலீசார் வாக்குமூலத்தை பெற்று நீதிமன்றத்தில் அளித்துள்ளார்கள். இதற்கிடையே தன்னிடம் இருந்து பணத்தை பறிப்பதற்காக தனது மருமகள் நாடகம் ஆடுவதாக மாமனார் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *